Skip to content
  • FREE Delivery on orders above ₹500!
  • FREE Delivery on orders above ₹500!
Sri Ayurvedic Vaidya Mitra

Free Articles

Practical Ayurvedic reading and viewing from our practitioners — free, no charge, ever.

Everything here is free — you just need an account to open it. Sign in or create an account.

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி... அலோபதி மருத்துவர்களின் எதிர்ப்பு ஏன்?Article

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி... அலோபதி மருத்துவர்களின் எதிர்ப்பு ஏன்?

உலகம் முழுவதும் அதிகமாகப் பின்பற்றப்பட்டு வரும் அலோபதி மருத்துவத்துக்கும் அந்தந்த நாடுகளின் பாரம்பர்ய மருத்துவங்களுக்கும் எப்போதும் பனிப்போர் நிகழ்ந்து கொண்டேதானிக்கும். அந்த வகையில் மத்திய அரசின் புதிய அறிவிக்கை ஒன்று அலோபதி மருத்துவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.சில தினங்களுக்கு முன்பு மத்திய இந்திய மருத்துவ கவுன்சில் (CCIM) ஒரு கெஸட் அறிவிக்கையை வெளியிட்டது. அதில் முதுநிலை ஆயுர்வேத மருத்துவம் படித்தவர்கள் பொது மருத்துவம், முடநீக்கியல், கண், காது-மூக்கு-தொண்டை, பல் மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் அறுவைசிகிச்சை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். முதுநிலை ஆயுர்வேதப் படிப்பை முடித்தவர்கள் அதற்குத் தேவையான பயிற்சிகளைப் பெறவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இதுதொடர்பாகப் பேசியிருந்த கவுன்சிலின் தலைவர், ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளில் அறுவைசிகிச்சைகள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. அதைச் சட்டபூர்வமாக அறிவிக்கவே இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். ஆனால், இதற்கு அனுமதிக்கக் கூடாது என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் கடும்